19th of December 2014
சென்னை:ஆனந்த் தியேட்டர் உரிமையாளரான ஜி.உமாபதி 1961-ல் கட்டிய தியேட்டர் பிசாந்திபி. 1962ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த தியேட்டரை வாங்கினார். அன்றிலிருந்து சென்னையின் அடையாளமாக இருக்கும் இந்த தியேட்டரில்தான் சிவாஜி நடித்தப் படங்கள் ரிலீஸ் செய்யப்படும்.
கடந்த 10 வருடத்துக்கு முன் சாய் சாந்தி என்ற இன்னொரு தியேட்டர் இங்கு கட்டப்பட்டு இரண்டு தியேட்டர்களாக இருந்தது. தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இப்போது குறைந்து வருவதால் சென்னையின் முக்கியமான தியேட்டர்கள் எல்லாம் வணிக வளாகமாகவும், திருமண மண்டபங்களாகவும் மற்றப்பட்டு விட்டன.
அந்த வகையில், சாந்தி தியேட்டரும் இப்போது மாற்றப்பட இருக்கிறது. குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகளை கொண்ட நான்கு தியேட்டர்களுடன் வணிக வளாகமும் இங்கு கட்டப்பட இருக்கிறது. அடுத்த வருடம் இதற்கான வேலைகள் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Comments
Post a Comment