6th of December 2014
சென்னை:சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த ஜேம்ஸ் வசந்தன் திடீரென சினிமாவில் இசையமைப்பாளராக மாறி‘சுப்ரமணியபுரம்’ என்ற சூப்பர்ஹிட் படத்தில் அருமையான பாடல்களை தந்த வியப்பு அடங்கவே வெகு நாட்களானது.
அதன்பின் தொடர்ந்து ஏழு வருடங்களாக இசையமைத்து வந்தவர் தற்போது ‘வானவில் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்குவதன் மூலமாக டைரக்ஷன் துறையிலும் கால் பதித்துள்ளார். கல்லூரி வாழ்க்கையில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளை மையமாகக்கொண்டு உருவாகும் இந்தப்படத்தில் முற்றிலும் புதுமுகங்களாக கல்லூரியில் படிக்கும் 11 பேரை அறிமுகப்படுத்தியுள்ளார் ஜேம்ஸ்..
இந்தப்படத்தில் ஜாஸ், ஹிப்பாப், கானா, கர்நாடகம், நாட்டுபுறம் என பல ஜானர்களில் மொத்தம் 17 பாடல்கள் இடம்பெறுகிறது. இதில் ஒரு புதிய முயற்சியாக 1940களில் வந்த பழைய படங்களைப்போல இதில் நடிப்பவர்களே பாடல்களை பாடும் முறையை மீண்டும் கொண்டுவந்துளார் ஜேம்ஸ் வசந்தன்.
அதற்கேற்ற மாதிரி பாடும் திறமையுள்ளவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்.
தான் ஏற்கனவே கனவு கண்ட ஒரு இன்னிசை சித்திரமாக இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். படம் கிட்டத்தட்ட தயாராகி விட்டாலும் பெரிய படங்கள் தொடர்ந்து வெளியாக இருப்பதால் 2015 பிப்ரவரியில் காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.
Comments
Post a Comment