பிரணிதா கோபம் மலை ஏறியது!!!

30th of December 2014
சென்னை:சில வருடங்களுக்கு முன் தமன்னாவுக்கும், கோலிவுட் ஹீரோவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கோபம் அடைந்தார். தமிழ் படங்களை ஏற்காமல் தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தார். ஒரு வருடத்துக்கு மேல் இந்த கோபம் நீடித்தது. பின்னர் அஜீத் ஜோடியாக பிவீரம்' படத்தில் நடித்து கோபத்தை கைவிட்டு சகஜநிலைக்கு திரும்பினார்.

அதுபோல் ஒரு நிலைமை பிசகுனி' படத்தில் நடித்த பிரணிதாவுக்கு ஏற்பட்டது. தெலுங்கில் திரிவிக்ரம் இயக்கும் படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். படப்பிடிப்பில் அவர் பொருத்தமான காஸ்டியூம் அணியவில்லை, எதிர்பார்த்த நடிப்பையும் வெளிப்படுத்தவில்லை என்று இயக்குனர் கோபம் அடைந்தார். படப்பிடிப்பு தளத்திலேயே பிரணிதாவுக்கு டோஸ்விட்டார். கோபம் அடைந்த பிரணிதா அங்கிருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக நித்யா மேனனை இயக்குனர் ஒப்பந்தம் செய்தார்.இயக்குனர் மீது இருந்த கோபத்தால் இனி தெலுங்கு படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்தாராம்.

அவரது கோபம் மாதக்கணக்கில்கூட நீடிக்கவில்லை. தமிழில் விக்ரம் பிரபு நடித்த பிஅரிமா நம்பி' தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் விஷ்ணு மன்ச்சு ஹீரோ. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பிரணிதாவுக்கு அழைப்பு வந்தது. உடனே அதை அவர் ஏற்றுக்கொண்டார். சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என்று இன்டஸ்ரிக்காரர்கள் கமென்ட் அடிக்கின்றனர்.

Comments