விஜய், ரஜினியை தொடர்ந்து அஜித்தை பிடித்த சனி!!!

20th of December 2014
சென்னை:இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு புது டிரண்ட் ஒன்று ஆரம்பித்துள்ளது, அது என்னவென்றால் ஒரு படம் ஆரம்பிக்கும் போதும், அதன் படபிடிப்பு நடைபெறும் போதும் யாரும் இது என்னுடைய கதை என்று சொல்லிக்கொண்டு வருவதில்லை. அதுவே அந்த படம் முடிவடைந்து வெளியீட்டு தயாராகும் நிலையில் இருக்கும் போது இது என்னுடைய கதை என்று யாராது கையை தூக்கிகொண்டு வந்துவிடுகிறார்கள்.
 
சமீபத்தில் வெளியான விஜய்யின் கத்தி படத்திற்கும் சரி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்திற்கும் சரி ,படம் வெளியாகும் போது என்னுடைய கதையை திருடி படமெடுத்துவிட்டார்கள் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த படத்தை வெளிவரவிடாமல் சிலர் சதிவேலைகளை செய்துவந்தனர். விஜய், ரஜினியை அடுத்து அஜித்தை புடித்துள்ளது அந்த டிரண்ட் (சனி).
 
அட ஆமாங்க இப்போது அஜித் நடித்து வரும் என்னை அறிந்தால் படத்தின் கதை என்னுடையது என்று ஒரு உதவி இயக்குனர் புலம்ப ஆரம்பித்திருக்கிறார். இவர் கௌதம் மேனன் நடுநிசி நாய்கள் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உதவி இயக்குனரிடம் சொன்ன கதை தான் தற்போது கௌதம்மேனன் காதுக்குபோய் ”என்னை அறிந்தால்” என்ற படமாக உருவாகிவருகிறது என்று குற்றம் கூறுகிறார்.
 
ஆனால் அதற்கான ஆதாராம் எதுவும் இவரிடத்தில் இல்லை, எனவே இந்த விஷயத்தை கௌதம் மேனன் கண்டுகொள்ள தேவை இல்லை, இது போல் படம் வெளியாகும் சமயத்தில் என்னுடைய கதை என்று சொல்லுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சிலரின் கருத்துகள்.

Comments