16th of December 2014
சென்னை:மாதவன் மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அப்படம் சூப்பர் ஹிட்டானது.
பின் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின் ஒரு கட்டத்தில் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார், தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வேட்டை, தற்போது இயக்குனர் சுதா இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தமிழ் , ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இப்படத்தில் மாதவன் குத்து சண்டை வீரராக நடித்து இருக்கிறார், இப்படம் தமிழில் இறுதி சுற்று என்ற தலைப்பில் வெளியாக உள்ளது ஹிந்தியில் சாலா கடூஸ் என்ற தலைப்பில் வெளியாக உள்ளது, தற்போது இப்படத்தின் 1 ஸ்ட லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .
Comments
Post a Comment