5th of December 2014
சென்னை:தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரௌடிதான்’ படத்தை எடுக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதன் முறையாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தை சிம்பு-வரலட்சுமியை வைத்து போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
சென்னையை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. அதனால் இதன் படப்பிடிப்பை சென்னையின் முக்கிய இடங்களை சுற்றியே படமாக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் சமீபத்தில் வெளியான ராஜா ராணி மற்றும் கத்தி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். தனுஷ்-அனிருத் கூட்டணி அமைந்த பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வரிசையில் இப்படத்தின் பாடல்களும் பெரியளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment