29th of December 2014
சென்னை:பிரஷாந்தின் சாஹசம் படத்திற்காக, முன்னணி நடிகரான சிம்பு (எ) சிலம்பரசன் பின்னணி பாடியுள்ளார். இந்த பாடல், இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமன், சாஹசம் படத்திற்காக கடினமாக உழைத்து ஐந்து அற்புதமான பாடல்களை பதிவு செய்துள்ளதாகவும், இது பிரஷாந்தின் சாஹசம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பக்க பலமாக இருக்கும் என்றும் இசையமைப்பாளர் தமனை தியாகராஜன் பாராட்டினார்.
தமன் இசையமைத்த 5 பாடல்களிலும் எது சிறந்த பாடல் என முடிவு செய்வது சிரமமான விஷயம் என ஆச்சரியத்துடன் கூறினார் தியாகராஜன்.
பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
Comments
Post a Comment