விக்ரம் பட சிட்டி ரைட்ஸை கைப்பற்றியது ஏ.ஜி.எஸ்!!!

24th of December 2014
சென்னை:ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிக்க மிக பிரமாண்டமாக தயாராகியுள்ளது ‘ஐ’ படம்.. சமீபத்தில் வெளியான இதன் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க வைத்திருக்கிறது. படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக, ஆனால் ஐந்து நாட்கள் முன்கூட்டி ஜனவரி-9ஆம் தேதியே வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமை விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.. மிக முக்கியமான ஏரியாக்களாக கருதப்படும் சென்னை மற்றும் செங்கல்பட்டு வெளியீட்டு உரிமையை கல்பாத்தி அகோரத்தின் ஏ.ஜி.எஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த இரண்டு ஏரியாக்களிலும் சேர்த்து மொத்தம் 175 திரையரங்குகளில் ‘ஐ’ திரையிடப்பட இருக்கிறது.

Comments