9th of December 2014
சென்னை:தனது லொட லொட நான்ஸ்டாப் பேச்சால் எப்.எம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ரேடியோ பாலாஜி. சுந்தர்.சியின் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் மூலம் தனது வெள்ளித்திரை அரங்கேற்றத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியவர், இப்போது ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.
என் நண்பர்கள் விஜய்சேதுபதியுடனும் விக்னேஷ் சிவனுடனும் இணைந்து வேலை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என இதுகுறித்து டிவிட்டரில் தகவல் தட்டியுள்ளார் பாலாஜி. தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.
Comments
Post a Comment