19th of December 2014
சென்னை:தடைகள் பல தாண்டி ‘கத்தி’ படம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு நன்றி சொல்லும் விதமாக நெல்லையில் தனது ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் விஜய். கூடவே காமெடி நடிகர் சதீஷும் சென்றிருந்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய விஜய், “சினிமாவும் புட்பால் மாதிரிதான்.. அத்தனை பேரின் உழைப்பும் ஒன்று சேர்ந்தால் தான் ஒரு கோல் போடமுடியும்.. கத்தி படத்தின் வெற்றியும் இதேபோன்றதுதான்..” என்றவர் பல தடைகளை கடந்து இந்த வெற்றியை சாதித்த ‘கத்திக்கு’ ஆரம்பத்தில் இடையூறு ஏற்படுத்தியவர்களையும் போகிறபோக்கில் போட்டுத்தாக்கினார்.
நாம் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை எதிரியின் கையில் உள்ள ஆயுதம் தான் தீர்மானிக்கும்.. அவன் சாப்டாக பேசினால் நாமும் சாப்ட்டாக பேசலாம். அவன் ‘வேறமாதிரி’ இறங்கினால், நாமும் ‘வேறமாதிரி’ இறங்கித்தான் ஆகணும்” என்ற விஜய்யின் பேச்சில், ரிலீஸுக்கு முன் அவர் அனுபவித்த வலி நன்றாகவே தெரிந்தது.
Comments
Post a Comment