எளிமையாக நடந்த ‘இடம் பொருள் ஏவல்’ இசை வெளியீடு!!!

19th of December 2014
சென்னை:நீர்ப்பறவை’ படத்திற்குப்பின் சீனுராமசாமி இயக்கியுள்ள படம் தான் ‘இடம் பொருள் ஏவல்’. தான் எழுதிய பாடல் மூலம் தேசியவிருதுபெற்று, அதன்மூலம் சீனு ராமசாமிக்கு கௌரவம் சேர்த்த கவிஞர் வைரமுத்து தான் இந்தப்படத்திலும் பாடல்களை எழுதியிருக்கிறார். ஆச்சர்யமாக இந்தப்படத்தில் முதன்முறையாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன் இந்தப்படத்தின் பாடல்கள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. அதனாலேயே மிக பிரமாண்டமாக நடத்தலாம் என்று முதலில் தீர்மானிக்கப்பட்ட இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சூரியன் எப்.எம்மில் படக்குழுவினர் முன்னிலையில் மிகவும் எளிதாக நடைபெற்றது.
 
இந்த விழாவில் படத்தயாரிப்பாளர் என்கிற முறையில் இயக்குனர் லிங்குசாமி கலந்துகொண்டார். வைரமுத்து, சீனு ராமசாமி, கதாநாயகர்கள் விஜய்சேதுபதி, விஷ்ணு, கதாநாயகிகள் ஐஸ்வர்யா, நந்திதா ஆகியோர் கலந்துகொண்டு இசைத்தகட்டினை வெளியிட்டனர்.

Comments