பொங்கல் ஜல்லிக்கட்டில் இடம்பிடித்தான் ‘கொம்பன்’!!!

17th of December 2014
சென்னை:இந்த முறை பொங்கல் திருவிழா ரணகளமாகத்தான் இருக்கப்போகிறது. கிட்டத்தட்ட 90களில் பொங்கல் பண்டிகைகளில் வெளியாகுமே அதே மாதிரி இந்தமுறை பல படங்கள், அதிலும் பெரிய படங்கள் இறங்குகின்றன. நீண்ட நாட்களாக ரசிகர்களை எதிர்பார்ப்பில் வைத்திருக்கும் ஷங்கரின் ‘ஐ’ படம் பொங்கலை முன்னிட்டு, ஆனால் சில நாட்கள் முன்னதாகவே அதாவது ஜனவரி-9ஆம் தேதியே வெளியாக இருக்கிறது.

போன பொங்கலுக்கு வீரம் தந்த அஜித், இந்த பொங்கலுக்கு என்னை அறிந்தால்’ தருகிறார்.. சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் ‘ஆம்பள’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ ஆகியவையும் பொங்கலுக்கு புக் செய்து வைத்திருக்கின்றன. இப்போது இந்த அதிரடி ஜல்லிக்கட்டில் கார்த்தி நடிக்கும் ‘கொம்பன்’ படமும் சேர்ந்துள்ளது. இதற்கான போஸ்டர் அறிவிப்பை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.

Comments