22nd of December 2014
சென்னை::தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 8 மொழி நடிகர்கள் மோதும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் துவங்குகின்றன. பிப்ரவரி இறுதி வரை இந்த போட்டி நடைபெறும்.
இதுவரை தமிழ், நடிகர்கள் அணிக்கு கேப்டனாக விஷால் இருந்து வந்தார். அவர் இந்த வருடம் நடைபெறும் போட்டியில் ஆடவில்லை. கேப்டன் பதவியில் இருந்தும் விலகுகிறார். படங்களில் பிசியாக நடிப்பதாலும் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும் நட்சத்திர கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
விஷாலுக்கு பதில் தமிழ் நடிகர்கள் அணியின் கேப்டன் பதவிக்கு ஜீவா, விஷ்ணு விஷால், விக்ராந்த் பெயர்கள் அடிபட்டன. ஆனாலும் நட்சத்திர அந்தஸ்து அடிப்படையில் ஜீவாவே தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் நடிகர்கள் அணியில் ஆர்யா, ஜித்தன் ரமேஷ், பரத், சாந்தனு போன்றோரும் முன்னணி ஆட்டக்காரர்களாக உள்ளனர். இந்த முறை நடிகர் சிம்புவும் இந்த அணியில் இணைந்து ஆடப்போவதாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment