- Get link
- X
- Other Apps
சென்னை:லட்சுமி மேனன் நடிப்பது மட்டுமின்றி பாடுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
ஏற்கெனவே, இவர் விமல், பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான ஒரு ஊர்ல ரெண்டு
ராஜா படத்தில் பாடல் ஒன்றை பாடினார். இமான் இசையமைப்பில் அவர் பாடிய
‘குக்குரூ’ பாடல் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றாக
இருக்கிறது. அப்பாடலில் இனியா நடனமாடியிருந்தார்.
தற்போது அதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக பாடல் ஒன்றை பாடி இருக்கிறார்
லட்சுமி மேனன். பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சாகசம்’. இந்தப்
படத்திற்காகத் தான் தமன் இசையில் மதன் கார்க்கி எழுதிய பாடலை
பாடியிருக்கிறாராம். படத்தை அருண்ராஜ் வர்மா எனும் புதுமுக இயக்குனர்
இயக்குகிறார்.
லட்சுமி மேனன் தற்போது கார்த்தியுடன் கொம்பன் படத்திலும், கெளதம்
கார்த்திக்குடன் சிப்பாய் படத்திலும் நடித்து வருகிறார். இந்த பிஸிக்கு
மத்தியில் ப்ளஸ் டூ இறுதி தேர்வுக்கும் தயாராகி வருகிறார். இடையில்
அவருக்கு ஒரேயொரு நாள் மட்டும் விடுமுறை கிடைத்திருக்கிறது. அந்த
விடுமுறையில் தான் வந்து பாடலை பாடிக் கொடுத்துவிட்டு சென்றாராம்..!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment