தென்னிந்திய சினிமாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஸ்டார்ஸ் யார்?!!!

20th of December 2014
சென்னை:இணையதள பேஸ்புக், டுவிட்டர் பகுதியில் நடிகர், நடிகைகளை இணைந்து கொண்டிருக்கிறார்கள். தங்களை பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை யாருக்கு அதிகமாக இருக்கிறது என்று நட்சத்திரங் களுக்குள்ளேயே போட்டி மனப்பான்மையை இது ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சில நடிகைகள் தங்களின் அந்தரங்க விஷயங்களைப்பற்றிக்கூட வெளிப்படையாக டுவிட்டரில் பரவவிடுவதுடன் கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிடுகின்றனர். ரசிகர்களின் கவனத்தை ஸ்டார்ஸ் இப்படி ஈர்த்தாலும் ரசிகர்களே முன்வந்து கூகுளில் சிலரை பற்றி அறிய அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

இந்த ஆண்டில் எந்த நடிகர், நடிகைகளை நெட்டில் ரசிகர்கள் அதிகமாக தேடி இருக்கிறார்கள் என்பதை வரிசைப்படுத்தி இருக்கிறது கூகுள். தென்னிந்திய சினிமாவில் அந்த பட்டியலில் ஹீரோக்களில் விஜய் முதலிடம் பிடித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து நடிகைகளில் முதலிடத்தை காஜல் அகர்வால் பிடித்திருக்கிறார். தமன்னா, சமந்தா, அஜீத், மகேஷ்பாபு, பவன் கல்யாண் அடுத்தடுத்து இடம் பிடித்திருக்கின்றனர். தற்போது  சிம்பு தேவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். தனுஷ் ஜோடியாக ‘மாரி', என்டிஆர் ஜோடியாக 'டெம்பர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.

Comments