விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் ஒரு படத்தில் விக்ரம் பிரபுவுக்கு தாய்மானாக வடிவேலு!

5th of December 2014
சென்னை:வைகை புயல் வடிவேலு இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்லிவந்தார், ஆனால் தற்போது தன் பழைய பாதைக்கே திரும்பிவிட்டார் , அதாவது மீண்டும் காமெடியனாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் ஒரு படத்தில் விக்ரம் பிரபுவுக்கு தாய்மானாக நடிக்க உள்ளாராம்....

ஹீரோவாக நடித்த வடிவேலு மீண்டும் காமெடியனாகவே நடிக்கலாம் என்று முடிவெடுத்து விட்டார் என்றே தெரிகிறது. தெனாலிராமனாக ரீ எண்ட்ரி ஆனாலும் எலி படம்தான் கைக்கு சிக்கியது. அதுவும் சிக்கலில் இருப்பதால் இருப்பை தக்கவைத்துக்கொள்ள மீண்டும் காமெடி பாதைக்கே திரும்பிவிட்டாராம். 
அரசியல் ஆசையால் திமுகவிற்கு போன வைகைப் புயல் வடிவேலுவின் சினிமா வாழ்க்கை அஸ்தமித்து போனது. எனினும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ‘தெனாலிராமன்' திரைப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். தற்போது கதாநாயகனாக ‘எலி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை யுவராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் ஏதோ சிக்கலாம்.

இந்நிலையில் வடிவேலு, விக்ரம் பிரபு நடிக்கும் திரைப்படம் ஒன்றில் காமெடி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவர் ரீ- எண்ட்ரி செய்த பின்னர் காமெடி கேரக்டரில் நடிக்கும் முதல்படம் இதுதான்.பிரபல இயக்குனர் எழில் அவர்களின் உதவியாளர் முருகைய்யா இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு மாமாவாக வடிவேலு நடிக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகின்றன.

பிப்ரவரியில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என முருகைய்யா தெரிவித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து வடிவேலு மீண்டும் காமெடி வேடங்களில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

Comments