2nd of December 2014
சென்னை
5. கத்தி
கத்தி சென்ற வார இறுதியில் சென்னையில் 1.5 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது
இடத்தைப் பிடித்துள்ளது. 18 திரையிடல்களில் இந்த வசூலை படம்
பெற்றிருக்கிறது.
இதுவரை இதன் சென்னை சிட்டி வசூல் 7.78 கோடிகள். இந்த வருடத்தின் டாப் சென்னை வசூல்.
4. மொசக்குட்டி
சென்ற வாரம் வெளியான இப்படம் சென்னையில் முதல் மூன்று தினங்களில் 4.6
லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. மிகச்சுமாரான
வசூல்.
3. ஆ
அம்புலி 3டி படத்தை எடுத்தவர்களின் பேய் படமான ஆ சென்ற வாரம் வெளியானது.
முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை மாநகர வசூல் 5.5 லட்சங்கள்.
2. நாய்கள் ஜாக்கிரதை
நூற்றுக்கணக்கில் கதைகள்கேட்டு சிபி நடிக்க ஒப்புக் கொண்ட படம். படம்
வெளியான பிறகு சிபியின் கதை கேட்கும் திறமை சந்தேகத்துக்குள்ளானது.
நூற்றுக்கணக்கான கதைகளில் இதுதான் தேறியதா? சென்ற வார இறுதியில் இப்படம்
23.3 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன்
சென்னை மாநகர வசூல் 77.4 லட்சங்கள் மட்டுமே.
1. காவியத்தலைவன்
வசந்தபாலனின் படம் என்றால் ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கதான்
செய்கிறது. கூடவே ஏ.ஆர்.ரஹ்மான். சென்ற வாரம் வெளியான காவியத்தலைவன் முதல்
மூன்று தினங்களில் 88 லட்சங்களை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Comments
Post a Comment