17th of December 2014
சென்னை:கடந்த வெள்ளியன்று சூப்பர்ஸ்டாரின் பிறந்தாநாளை முன்னிட்டு வெளியான ‘லிங்கா’ படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. சூப்பர்ஸ்டாருக்குத்தான் பிரபல நட்சத்திரங்களும் ரசிகர்களாயிற்றே.. படத்தை இன்னும் பார்க்காமல் இருப்பார்களா..? இல்லை நம்ம ராய் லட்சுமி மட்டும் அதற்கு விதிவிலக்காகி விடுவாரா என்ன..?
லிங்கா படத்தை பார்த்த ராய் லட்சுமி, “நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தலைவரை அடிச்சுக்க ஆளே இல்லை.. இடைவேளைக்குப்பின் வரும் காட்சிகளில் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. அனுஷ்கா, சோனாக்ஷி இருவரின் நடிப்புமே சூப்பர்ப்.. மொத்தத்தில் ‘லிங்கா’.. மாஸ்..கிளாஸ்..” என டிவிட்டரில் தன்னை தலைவர் அழவைத்த கதையை கூறியிருக்கிறார்.
Comments
Post a Comment