ஜெய் 'புகழ்' பெற்றார்!!!

2nd of December 2014
சென்னை::சராசரியான வாலிபன் மற்றும்  அப்பாவியான கதாபாத்திரங்களில் சோபிக்கும் ஜெய் சமீபமாக அதிரடி ஆக்க்ஷன் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.எந்த கதா பாத்திரத்தை ஏற்றாலும் அதை  சவாலாக ஏற்று செவ்வனே முடிக்கும் இவருடைய அடுத்த படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் என்கிறார் இயக்குனர் மணிமாறன்.

இந்த  படத்தில் ஜெய் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் 'புகழ்'. தயாரிப்பாளர் சுஷாந்த் இந்த படத்தை  கூறும் போது ' நம் வாழ்வில் நாம் எப்போதும் அறிந்தோ , அறியாமலோ ஜெயிக்க வாய்ப்பில்லை என கருத படுபவர் ஜெயிக்க வேண்டும் என ஆசை படுவதுண்டு. அவர்களின் வெற்றியில் நாம் நம்மை காண விழைவது உண்டு.'புகழ்' நாம் வாழ்வில்நாம் சந்திக்கும் அத்தகைய ஒரு நபரை .பற்றிய கதை.


கதாநாயகன் ஜெய் மற்றும் மற்றும் இயக்குனர் மணிமாறன் அந்த உணர்வுகளை பிரமாதமாகவெளிப்படுத்தி உள்ளார்கள்.
' கதாநாயகிக்கான தேர்வு நடை பெரும் போது பல்வேறு பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. ஆனால் இறுதியில் அந்த பாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் 'இவன் வேற மாதிரி' படத்தில் நடித்த சுரபிதான்அவர் அந்த பாத்திரத்துக்கு மிக சரியான தேர்வு எனக் கூறலாம்.

'புகழ்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து , இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது.   வெற்றி  வேண்டும் என முனைப்போடு செயல் படுகிறோம் ' என்கிறார் இயக்குனர் மணிமாறன். பிலிம் டிப்பார்ட்மெண்ட் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜ் தயாரிக்கும் இந்த படத்தை ரெடியன்ஷி மீடியா  சார்பில் வருண் மணியன் வெளியிடுகிறார்.

Comments