லேடி சூப்பர்ஸ்டார்’ – நயன்தாராவுக்கு உதயநிதி பாராட்டு!!!

7th of December 2014
சென்னை:நயன்தாராவை ஒரு பீனிக்ஸ் பறவை என்று கூட சொல்லலாம்.. இரண்டு காதல் முறிவுகளுக்கு பின்னும் கூட, தன் மனவலிமை குறையாமல் தொடர்ந்து பத்து வருடங்களாக முன்னணி நடிகையாக பீல்டில் இருப்பது என்பது சாதாரண விஷயமா..? அதனால் தான் அவரை லேடி சூப்பர்ஸ்டார் என சரியாக பாராட்டியிருக்கிறார் உதயநிதி.
 
இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து தற்போது நண்பேன்டா என்கிற படத்திலும் நயன்தாராவுடன் இணைந்து நடித்துவரும் உதயநிதி அவரை லேடி சூப்பர்ஸ்டார் என பாராட்டியதோடு அல்லாமல் அவருடன் நடிப்பதே அதிர்ஷ்டமான விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் ராஜாராணி, ஆரம்பம் என இரண்டு ஹிட்டுக்களை கொடுத்த நயன்தாராவுக்கு இந்த வருடம் ஒரே ஒரு படம் தான் ரிலீஸ் என்றாலும் அடுத்த வருடத்தில், நண்பேன்டா, இது நம்ம ஆளு, தனி ஒருவன், மாஸ், நானும் ரவுடி தான் என அதிக அளவில் படங்கள் வெளியாகவிருக்கும் நடிகையாக அவர்தான் இருப்பார் என்பதை இப்போதே எழுதி வைத்துக்கொள்ளலாம்.

Comments