18th of December 2014
சென்னை:இயக்குனர் கே. பாலச்சந்தர் இறந்துவிட்டார் என்று தவறாக ட்வீட் செய்ததற்காக இயக்குனர் ராம் கோபால் வர்மா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இயக்குனர் கே. பாலச்சந்தர் உடல்நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் அவர் நலமாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறுகையில், இந்திய சினிமாவின் அருமையான இயக்குனர் கே. பாலச்சந்தரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
அதன் பிறகு பாலச்சந்தர் உயிருடன் இருக்கும் செய்தியை அறிந்த அவர் அந்த ட்வீட்டை அவசரமாக அழித்துவிட்டு புதிதாக ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.
அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,
பாலச்சந்தர் இறந்துவிட்டார் என்ற வதந்தியை நம்பி ட்வீட் செய்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment