14th of December 2014
சென்னை:கும்கிக்கு பிறகு விக்ரம்பிரபு நடித்த மூன்று படங்களுமே ஆக்சன் படங்கள் தான்.. அதில் சூழ்நிலைக்கேற்ற காமெடி தான் இருந்ததே தவிர விக்ரம் பிரபுவுக்கு காமெடிக்கான ஸ்கோப் கிடைக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.. ஆனால் தற்போது எழில் இயக்கத்தில் நடித்துள்ள ‘வெள்ளக்கார துரை’ படத்தில் காமெடியில் கலக்கியிருக்கிறாராம் விக்ரம்பிரபு..
காமெடி கூட்டணியாக கை கோர்த்திருப்பவர் சூரி.. படப்பிடிப்பு ஆரம்பித்த முதல் நாளே, சூரி மேக்கப் போடும் இடத்துக்கே சென்றுவிட்ட விக்ரம் பிரபு, சூரியிடம் தனக்கு காமெடி நடிப்பு பற்றிய டிப்ஸ்களை சொல்லித்தந்து உதவுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஒரு ஹீரோவே தன்னிடம் ஈகோ இல்லாமல் இப்படி கேட்டதை பார்த்து ஆச்சர்யத்தில் ஷாக்காகி நின்ற சூரிக்கு அடுத்த அதிர்ச்சி இளைய திலகம் பிரபுவிடம் இருந்து வந்த போன்கால்.. அதில் பேசிய பிரபு, “நம்ம தம்பி
இதுவரைக்கும் நடிச்சதுல்லாம் ஆக்சன் ஏரியா.. அதனால இந்த தடவை காமெடியில் ஸ்கோர் பண்றதுக்கு நீங்க கொஞ்சம் தம்பிக்கு ஹெல்ப் பண்ணனும்.. கூடமாட இருந்து பாத்துக்குங்க” என கோரிக்கை வைக்க, மிரண்டே விட்டாராம் சூரி..
‘வெள்ளைக்கார துரை’ இசை வெளியீட்டு விழாவின் போது இந்த ஆச்சர்ய நிகழ்வை பகிர்ந்துகொண்ட சூரி, “ஊருக்கே நடிப்பு சொல்லிக்கொடுத்த குடும்பம் அது.. அவங்க என்கிட்டே விக்கிக்கு காமெடி சொல்லிக்கொடுன்னு கேட்குறாங்க.. நடிப்பு கத்துக்கொடுத்தேனோ இல்லையோ, அந்த குடும்பத்துல இருந்து எப்படி பணிவா இருக்கனுங்கிறத நான் கத்துக்கிட்டேன்” என நெகிழ்ந்தார்.
விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். டி.இமான் இசையமைக்க, படம் வரும் டிச-25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக ரிலீசாகிறது.
Comments
Post a Comment