விஜய் சேதுபதி மீசை-தாடிக்கு விடை கொடுத்தார்!!!

11th of December 2014
சென்னை:தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘நானும் ரவுடிதான்’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பவர் நயன்தாரா. 

இவர்கள் இணையும் இந்த படத்தை போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக விஜய் சேதுபதி தனது தாடி மற்றும் மீசைக்கு விடை கொடுத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
இதில் விஜய் சேதுபதி தன்னுடைய தாடி மற்றும் மீசையை சவரம் செய்து, இளமையுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதுவரையிலான படங்களில் லேசான தாடி மற்றும் மீசையுடன் வலம்வந்த விஜய் சேதுபதியை, இப்படத்தில் அது இல்லாமல் பார்ப்பது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருந்தது.

இதுதவிர, தன்னுடைய உடல் எடையையும் சற்று குறைத்துள்ளார்.
மீசை-தாடியுடன் அவரை ரசித்த ரசிகர்கள், இந்த தோற்றத்தையும் ரசிப்பார்களா? என்பதை படம் வெளியான பிறகுதான் பார்க்கவேண்டும்.

Comments