புதுமுக நடிகைக்கு சப்போட்டாக இருந்த பாபி சிம்ஹா!!!

4th of December 2014
சென்னை:ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்தவர் பாபி சிம்ஹா. அதையடுத்து ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்தில் காமெடி கலந்த போலீசாக நடித்தார். 

தற்போது வெளியாகியுள்ள ஆ படத்தில் சேலஞ்ச் பண்ணும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கோகுல், பால சரவணனுடன், மேக்னா என்ற நடிகையும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். புதுமுக நடிகையான இந்த மேக்னாவுக்கு, படப்பிடிப்பு நடந்தபோது நாயகன் கோகுலைப்போன்று பாபி சிம்ஹாவும் சப்போட்டாக இருந்தாராம். 
 
இதுபற்றி மேக்னா கூறுகையில், இந்த படத்தில் தண்ணீரில் நடிக்கும் காட்சி மட்டுமின்றி சில கடினமான காட்சிகள் நடிக்க நான் கொஞ்சம் சிரமப்பட்டேன். அதோடு மனதளவில் பயந்தும் இருந்தேன்.

அப்போதெல்லாம் பாபி சிம்ஹா எனக்கு பல இடங்களில் உதவி செய்தார். அவர் கொடுத்த தைரியத்தினால் கைதட்டல் பெறும் அளவுக்கு சில காட்சிகளில் நடித்தேன். உடன் நடித்தவர்கள் இப்படி உதவி செய்ததால்தான் என்னால் டைரக்டர் சொன்னபடி நடிக்க முடிந்தது. 

 அதோடு, அடுத்த படத்தில் இன்னும் அதிரடியான வேடங்களில் நடிப்பதற்கும் இந்த படத்தில் நான் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று கூறும் மேக்னாவுக்கு, மாறுபட்ட சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதில்தான் அதிக ஆர்வம் உள்ளதாம்.

Comments