16th of December 2014
சென்னை::விக்ரம், மனசுக்குள் மத்தாப்பு, பகலில் பவுர்ணமி போன்ற படங்களில் நடித்திருப்பவர் லிசி. மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 24 வருடம் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்குள் சமீபகாலமாக மனக்கசப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்தனர். விருப்பத்தின் பேரில் இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த லிசி தற்போது மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். பிரியதர்ஷன் நடிக்க கூடாது என கண்டிஷன் போட்டதாலேயே அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டிருந்தாராம்.
இப்போது பிரிந்துவிட்டதால், பிரியதர்ஷனை கடுப்பேற்றவே அவர் நடிக்க வருவதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் தற்போது தமிழ் படங்களில் நடிக்கவே லிசி அதிக ஆர்வம் காட்டுகிறார். விரைவில் ராம் இயக்கும் புதிய படமொன்றில் அவர்
Comments
Post a Comment