2nd of December 2014
சென்னை::கணவன் மனைவியான நடிகை லிஸ்ஸியும், இயக்குனர்
பிரியதர்ஷனும் விவாகரத்து கேட்டு, குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்த்துள்ளனர்.
மலையாள நடிகையான லிஸ்ஸி, தமிழ் மற்றும்
தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவரும் இயக்குனர் பிரியதர்ஷனும்
காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என
இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணமாகி 24 ஆண்டுகள் ஆனா, இந்த தம்பதியர்
தற்போது கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொள்ள முடிவு
செய்துள்ளனர்.
இது குறித்து நடிகை லிஸ்ஸி கூறுகையில், "24 வருட
திருமண வாழ்க்கைக்கு பிறகு நானும், பிரியதர்ஷன் அவர்களும் முழு மனதுடன்
பிரிய முடிவெடுத்துள்ளோம் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள்
பிரிவை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த இன்று சென்னை குடும்ப நல
நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளேன். எங்களது இந்த
முடிவை எங்களின் குழந்தைகளும், நண்பர்களூம் அறிவார்கள்.
இந்த
கடினமான காலத்தில் தாங்கள் அனைவரும் எங்களின் கவலை அறிந்து, எங்களின்
தனியுரிமை மதித்து செயல்படுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று
தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment