60 வயசுக்கு மேல இப்படி ஒரு தண்டனையா..?” ஹைதராபாத்தில் புலம்பிய சூப்பர்ஸ்டார்!!!

9th of December 2014
சென்னை:ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்த ‘லிங்கா’ தெலுங்குப்பதிப்பின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, “ஆண்டவன் என்னோட 60 வயசுக்கு மேல இப்படி ஒரு தண்டனையை கொடுத்திருக்க கூடாது. சோனாக்ஷி கூட டூயட் பாடுறத விட, ட்ரெயின் மேல நின்னு சண்டை போடுற காட்சில நடிச்சது ரொம்ப ஈசியா இருந்துச்சு” என்று கூறியிருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக மீனாவுடன் நடித்துவிட்டு, பின்னாளில் அவருடன் ஜோடியாக டூயட் பாடிய போது கூட ரஜினியிடம் இருந்து இப்படி ஸ்டேட்மென்ட் வந்ததாக தெரியவில்லை.. ஆனால் ‘லிங்கா’வில் சோனாக்ஷி சின்ஹாவுடன் டூயட் பாடுவதற்காக கேமரா முன்னாடி நின்ற சூப்பர் ஸ்டாருக்கு தான் நடிக்க வந்த புதிதில் கேமரா முன்னாடி நின்ற போது ஏற்பட்ட பதட்டத்தை விட அதிகம் உதறல் எடுத்ததாம்..
 
காரணம் சோனாக்ஷி, ரஜினியின் நீண்டகால நண்பரான இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள்… தனது மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோரைப்போல சோனாக்ஷியின் குழந்தைப்பருவத்தில் இருந்தே அவரை பார்த்து வருவதால் ஏற்பட்ட தயக்கம் தான் சூப்பர்ஸ்டாருக்கு அவருடன் சேர்ந்து நடிக்கும்போது இப்படி ஒரு உதறலை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் அந்த விழாவில் அவரே வெளிப்படையாக கூறியுள்ளார்.

Comments