17th of December 2014
சென்னை:பாகன் படத்தை அடுத்து நம்பியார், ஓம் சாந்தி ஓம், சாமியாட்டம் என பல படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீகாந்த்.
சென்னை:பாகன் படத்தை அடுத்து நம்பியார், ஓம் சாந்தி ஓம், சாமியாட்டம் என பல படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீகாந்த்.
இதில் நம்பியார் படத்தை தானே தயாரித்து நாயகனாக நடித்திருக்கிறார். மேலும், சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்க, சுனைனா நாயகியாக நடித்திருக்கிறார்.
கூடவே கூடுதல் கவர்ச்சி தரிசனமும் செய்திருக்கிறார். மேலும், தான் நடித்த படங்கள் 3 கோடிக்கு விற்பனை ஆவதே பெரிய விசயம் என்றபோதும், சந்தானம் படத்தின் டைட்டில் ரோலில் நடிப்பதால் 6 கோடி வரை செலவு செய்து நம்பியார் படத்தை தயாரித்திருக்கிறார் ஸ்ரீகாந்த்.
ஆனால் அப்படி அவர் பிரமாண்டமாக தயாரித்துள்ள அந்த படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆனபோதும் இன்னமும் விற்பனையாகவில்லை.
அதுபற்றி விசாரித்தபோது, நம்பியார் படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாரித்துள்ள ஸ்ரீகாந்த், படத்திற்கு நான் செலவு செய்த பணத்தை கொடுத்தாலும் போதும் தந்து விடுகிறேன் என்கிறாராம்.
ஆனால் விநியோகஸ்தர்களோ, உங்களுக்கும் மார்க்கெட் இல்லை. சந்தானமும் இப்போது இறங்குமுகத்தில்தான் இருக்கிறார்.
இப்படியிருக்கிற நிலையில், எப்படி 6 கோடிக்கு படத்தை வாங்குவது என்று வாக்குவாதம் செய்பவர்கள், இறுதியாக 3 கோடியில்தான் நிற்கிறார்களாம்.
அப்படி அவர்கள் கேட்ட ரேட்டுக்கு கொடுத்தால் பாதிக்கு பாதி நஷ்டமாகி விடுமே என்பதால்தான் என்ன செய்வது என்பது புரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறாராம் ஸ்ரீகாந்த்.
Comments
Post a Comment