விஜய் , சமந்தா நடிப்பில் வெளியான கத்தி படம் 50 வது நாளை கடந்து!!!

16th of December 2014
சென்னை:ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் , சமந்தா நடிப்பில் வெளியான கத்தி படம் 50 வது நாளை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது , இதனை விஜய் நேற்று திருநெல்வேலியில் தன் ரசிகர்களுடன் கொண்டாடினார்,

அப்போது விஜய் பேசியதாவது வெற்றிக்கும் , தோல்விக்கும் பெரிய வித்யாசம் ஒன்றுமில்லை கடைமையை செய்தால் வெற்றி கடமைக்குன்னு செய்தால் தோல்வி என்னுடைய படத்தை மட்டும் பார்க்கும் ரசிகர்கள் எனக்கு தேவையில்ல குடும்பத்தையும் காப்பாத்த கூடிய ரசிகனாக இருக்க வேண்டும்
 
உங்களுக்கெல்லாம் சம்பளம் கொடுப்பவர்கள் முதலாளி அதேபோல் என் படத்தை பார்க்க காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் ரசிகர்கள் அனைவரும் எனக்கு முதலாளிதான் என்று பேச ரசிகர்களிடையே ஒரே கைதட்டலும் கூச்சலுமாக இருந்தது .

Comments