டிச-29ல் ‘ரோமியோ ஜூலியட்’ டீசர்!!!

25th of December 2014
சென்னை:படம் தான் ‘ரோமியோ-ஜூலியட்’. 2011ல் வெளியான ‘எங்கேயும் காதல்’ படத்திற்கு பின் மீண்டும் ஜெயம் ரவி,ஹன்சிகா ஜோடி மீண்டும் ‘ரோமியோ-ஜூலியட்’ படத்தில்
இணைந்திருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த கள்வனின் காதலி’ படத்தை தயாரித்த  லட்சுமண் என்பவர் இப்போது இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இந்தப்படத்தில் வம்சி கிருஷ்ணாவும் பூனம் பஜ்வாவும் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கும் இந்தப்படத்திதில் ஹன்ஷிகாவுக்கும் பூனம் பஜ்வாவுக்கும் ஜெயம் ரவியுடன் இணைந்து ஒரு போட்டி நடனப்பாடல் கூட உண்டு. இந்தப்படத்தின் டீசர் வரும் டிச-29ல் வெளியிடப்படுகிறது.

Comments