2015 எங்களுக்கு சிறந்த வருடமாக இருக்கும்: எல்ரெட் குமார் நம்பிக்கை!!!

4th of December 2014
சென்னை:விண்ணைத்தாண்டி வருவாயா, கோ என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், தானும் ஒரு படம் இயக்கிப் பார்ப்போமே என ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தை இயக்கினார். படம் பாராட்டுக்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் போகவில்லை.

அதனால் மீண்டும் தயாரிப்பில் கவனம் செலுத்திவரும் எல்ரெட் குமார் ‘யாமிருக்க பயமே’ மூலம் நிமிர்ந்தார்.. அடுத்ததாக ‘யான்’ படத்தை தயாரித்தார். அதுவும் சரியான வரவேற்பை பெறாத நிலையில் “2015 எங்களுக்கு சிறந்த வருடமாக இருக்கும்” என இப்போதே நம்பிக்கை தெரிவித்துள்ளார்..


காரணம் 2015ல் இவரது முதல் தயாரிப்பாக டீகேயின் படம் தயாராகிறது. கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்த டீகே ஏற்கனவே இவர்களுக்கு ‘யாமிருக்க பயமே’ மூலம் வெற்றி ருசியை காட்டியவர் தான். இவரது முந்தைய படத்தைப்போல இதுவும் வித்தியாசமான கதைக்களத்தில் நகைச்சுவை நிரம்பியதாக இருக்கும் என்கிறார் எல்ரெட் குமார்.

Comments