மிஸ்கினின் பிசாசு டிசம்பர் 19-ல் ரிலீஸ்!!!

2nd of December 2014
சென்னை:சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், முகமூடி, யுத்தம் செய் போன்ற படங்களை இயக்கிய மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிசாசு’. இப்படத்தை பிரபல இயக்குனர் பாலாவின் ‘பி ஸ்டூடியோ’ தயாரித்துள்ளது.
 
நாகா, பிரயாகா போன்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். அரோள் இசையமைக்கிறார். பாண்டியநாடு படத்தில் நடித்துள்ள ஹாரிஸ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் டிசம்பர் 19-ம் தேதி திரைக்கு வருகிறது.
 
ஏற்கனவே, டிசம்பர் மாதம் ரஜினியின் லிங்கா, லாரன்சின் முனி-3, எஸ்.ஜே. சூர்யா இயக்கி, இசையமைத்து நடித்துள்ள ‘இசை’, பிரபு சாலமோன் இயக்கியுள்ள கயல், சித்தார்த்தின் எனக்குள் ஒருவன் ஆகிய படங்களும் வெளியாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இதில் ரஜினியின் லிங்கா அவரது பிறந்த நாளான 12-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

Comments