24th of December 2014
சென்னை:தமிழ் திரையுலகின் பிதாமகன், திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குனர், பல முன்னணி நட்சத்திரங்களை
அறிமுகம் செய்துவைத்த ‘இயக்குனர் சிகரம்’ கே.பாலசந்தர் நேற்று இரவு காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என
பல மொழிகளில் படைப்புகளை அளித்த இயக்குனர் கே.பாலசந்தர், தாதா சாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல
விருதுகளை வென்றவர்.
http://www.hello.fm/liveStream.aspx
ரஜினிகாந்தை அறிமுகம் செய்தவர், கமல்ஹாசன் குருவாக மதித்த ஆசான், பல இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் கே.பாலசந்தர். அவரது இழப்பு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும். இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவஞ்சலியாக ஹலோ எப்.எம். 106.4 இன்று இரவு 9 மணிக்கு சிறப்பு டைரி நிகழ்ச்சியை தனது அனைத்து நிலையங்களிலும் ஒலிபரப்புகிறது.

Comments
Post a Comment