தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்!!!

4th of December 2014
சென்னை:காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தில் நகுலும் ‘அட்டகத்தி’ தினேஷும் ஹீரோவாக நடிக்க கதாநாயகியாக நடிக்கிறார்  பிந்துமாதவி. எதிர்நீச்சல் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
பூமியை நோக்கிவரும் காந்தப்புயலால் தகவல் தொழில்நுட்பமும் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களும் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்கிற புதுமையான கதைக்களத்தை இந்தப்படத்திற்காக எடுத்துள்ளார் இயக்குனர் ராம்பிரகாஷ்..

இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு ‘U’சான்றிதழ் அளித்துள்ளனர். அனேகமாக இந்தப்படம் டிச-19 அல்லது இந்தமாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments