Vizhi Moodi Yosithal Movie Working Stills!!! ஹாலிவுட்டில் பயிற்சி பெற்று கோலிவுட்டுக்கு வந்திருக்கும் செந்தில்குமார்!!!

7th of November 2014
சென்னை:Tags : Vizhi Moodi Yosithal New Movie Photos, Vizhi Moodi Yosithal Latest Movie Gallery, Vizhi Moodi Yosithal Unseen Movie Pictures, Vizhi Moodi Yosithal Film Latest images, Vizhi Moodi Yosithal Movie Hot Stills, Vizhi Moodi Yosithal Movie New Pics.
 
புதிய முயற்சிகளுடன் வெற்றி பெறும் அறிமுக இயக்குநர்களின் வரிசையில் மேலும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருப்பவர் கே.ஜி.செந்தில்குமார். ‘விழி மூடி யோசித்தாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவாக இவர் அறிமுகமாகிறார்.

ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குநர் என்று முதல் படத்திலேயே இத்தனை சுமைகள் எதற்கு என்று அவரிடம் கேட்டதற்கு, “நான் கோயம்பத்தூரில் பிறந்து அங்கேயே தான் கல்லூரி படிப்பை முடித்தேன். அதன் பிறகு சினிமா மீதுள்ள ஆர்வத்தினால் அமெரிக்காவுக்கு சென்று அங்குள்ள திரைப்படக் கல்லூரியில் ஆக்டிங் மற்றும் டைரக்‌ஷன் படித்தேன். பிறகு ஹாலிவுட்டிலேயே பல்வேறு பணிகளை செய்து வந்தேன். சுமார் 2 வருடங்களில் 25 குறும்படங்களையும், 15க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களையும் இயக்கினேன். நான் இயக்கிய இரண்டு குறும்படங்களுக்கு சர்வதேச விருதுகளும் கிடைத்தது.

இப்படி ஹாலிவுட்டில் படித்து, அங்கேயே பணிபுரிந்தாலும், எனது தாய் மொழியான தமிழில் படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்காக, பல கதைகளை முழு திரைக்கதையுடன் நான் எழுதி வைத்திருந்தாலும், எனது முதல் படத்திற்கான கதையை பலமுறை பட்டை தீட்டி, படம் இயக்க தயாராகினேன். அதற்காக பல்வேறு நிறுவனங்களை அனுகியபோது காலதாமதமானதால் நானே தயாரிக்க முடிவு செய்தேன். பிறகு முன்னணி ஹீரோக்களை நடிக்க வைக்க முயற்சி செய்த போது, அதிலையும் காலதாமதமானதால், என் கதை மீது இருக்கும் நம்பிக்கையில் புதுமுகம் யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று யோசித்தேன். ஆனால், அவர்களுக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைப்பதை காட்டிலும், ஹாலிவுட்டில் ஆக்டிங் படித்த நாமே ஏன் நடிக்க கூடாது என்று எண்ணி, இப்படத்தில் நாயகனாகவும் நான் நடித்துள்ளேன்.

திரில்லர் க்ரைம் படமாக உருவாகியுள்ள இப்படம், கண்டிப்பாக ரசிகர்களை திருப்தி படுத்தும் அளவுக்கு சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தில் தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் யாராவது நடித்திருந்தால், இது இன்னொரு கஜினி போல இருந்திருக்கும். அந்த அளவுக்கு விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் நிறைந்த திரில்லர் படமாக இப்படத்தை நான் இயக்கியிருக்கிறேன்.

திரில்லர் படமாக இருந்தாலும், நகைச்சுவைக்காக இதில் பவர் ஸ்டாரையும் நடிக்க வைத்திருக்கிறோம். மேலும் நாயகனின் அம்மாவாக நடித்துள்ள ஊர்வசியின் கதாபாத்திர அமைப்பும் ரசிகர்களை ரொம்பவே கவரும்.” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சன் மியூசிக் சேனலில் நடைபெற்றது. தற்போது ‘விழி மூடி யோசித்தாள்’ படத்தின் வெளியீட்டில் பரபரப்பாக இயங்கி வரும் கே.ஜி.செந்தில்குமார், ஒரு படத்தை இயக்கி நடித்து அதை இசை வெளியீட்டு வரை எடுத்து வந்ததே, நான் பெருமையாக கருதுகிறேன் என்றவர், இப்படம் வெளியாகி அதற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை தொடர்ந்து, மேலும் பல தரமான படங்களை கொடுக்க தயாராக இருக்கிறேன், என்றார்.








Comments