Ulaganayagan Kamal Haasan Launc Lake Cleaning Stills!!! உலகநாயகனுக்கு இன்று பிறந்த நாள்!!!

7th of November 2014
சென்னை:Tags : Ulaganayagan Kamal Haasan Launc Lake Cleaning Stills, Ulaganayagan Kamal Haasan Launc Lake Cleaning Images, Ulaganayagan Kamal Haasan Launc Lake Cleaning Gallery.
 
தமிழ் சினிமாவை உலக அளவில் பிரபலப்படுத்திய தமிழ் சினிமா பிரபலங்களில் கமல்ஹாசனுக்கு முக்கிய இடம் உண்டு! தனது 4-ஆவது வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, இன்று வரை இந்திய சினிமாவின் பல்வேறு துறைகளிலாக சிறந்த ஒரு கலைஞானியாக விளங்கி வருபவர் கமல்ஹாசன்,

தனது வாழ்க்கையை சினிமாவுக்கு மட்டும் அர்பணித்துக் கொள்ளாமல், தான் சார்ந்த நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பல சமூக சேவகளிலும் தன்னை அர்பணித்துக் கொண்டு அரும் பணிகளை ஆற்றி வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இதற்கு கடந்த காலங்களில் அவர் செய்துள்ள பல சமூக பணிகளை நாம் குறிப்பிடலாம். அந்த வரிசையில் சமீபத்தில் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்த ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் தன்னையும் ஒரு அங்கமாக்கி, இன்று தனது பிறந்த நாளையொட்டி சென்னை மாநகரின் ஒரு பகுதியை சுத்தப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளார்
 
கலைஞானி கமல்ஹாசன். தனது ரசிகர்கள் மற்றும் தனது நண்பர்கள், நலம் விரும்பிகள் என ஆயிரக்கணக்கான மக்களுடன் கமல்ஹாசன் மேற்கொண்டுள்ள நற்பணிகள் நிச்சயமாக வெற்றிபெறும் என்பதில் ஐய்யமில்லை . தனது பிறந்த நாள், ஒரு அர்த்தமுள்ள தினமாக அமைய வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் செயல்பட்டு வரும் கமல்ஹாசனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் Poonththalir-Kollywood மிகவும் பெருமிதம் கொள்கிறது.

 











Comments