ஜூனியர் NTR கத்தி தெலுங்கு ரீமேக்கில்!!!

19th of November 2014
சென்னை:தீபாவளியன்று விஜய் நடிப்பில் வெளியான கத்தி படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
 
இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடலாம் என்று இருந்தனர் , பின் இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து ரீ-மேக் செய்ய முடிவு எடுத்தனர், பவன் கல்யான் இப்படத்தில் நடிக்க விருப்பம் காட்டினார் பின் படத்தை பார்த்துவிட்டு இது எனக்கு செட்டாகாதுன்னு சொல்லி விலகிவிட்டார்.

பின் இப்படத்தை தெலுங்கில் டப் செய்து நவம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துயிருன்தனர் ஆனால் தற்போது இப்படத்தின் ரீ-மேக்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது , அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது, ஜூனியர் என்.டி.ஆர் கத்தி படத்தின் ரீ -மேக்கில் நடிப்பது உறுதி என்றால் கத்தி படம் டப்பிங்கில் வெளியாகாது.
 
ஆனால் கத்தி படம் தெலுங்கில் டப் செயப்பட்டு வெளியாகுமா அல்லது ரீ-மேக் செயப்பாட்டு வெளியாகுமா என்பது உறுதியாக தெரியவில்லை.

Comments