Maane Theney Paeye Movie Stills!!! கோடம்பாக்கத்தில் அறிமுகமாகும் பெங்கால் நாயகி!!!

21st of November 2014
சென்னை:Tags : Maane Theney Paeye New Movie Photos, Maane Theney Paeye Latest Movie Gallery, Maane Theney Paeye Unseen Movie Pictures, Maane Theney Paeye Film Latest images, Maane Theney Paeye Movie Hot Stills, Maane Theney Paeye Movie New Pics.

சூர்யா-ஜோதிகா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகியப் படங்களை இயக்கிய கிருஷ்ணா, அடுத்து இயக்கும் தனது புதிய படத்திற்கு ‘மானே தேனே பேயே’ என்று தலைப்பு வைத்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் ‘பென்சில்’ படத்தை தயாரித்து வரும் கல்சன் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக ஆரி நடிக்க, நாயகியாக பிரபல பெங்கால் நடிகை சுபஸ்ரீ கங்குலி நடிக்கிறார். இவர் பெங்கால் மொழியில் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அங்கு ம்ன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர்களுடன் டேனியல் பாலாஜி, சஞ்சனா, செண்ட்ராயன், செவ்வாளை, மயில்சாமி, மீரா கிருஷ்ணன், மதுமிதா, அர்ஜூனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.


எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சதயா இசையமைக்கிறார். ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுத, யுகபாரதி, விவேகா, கிருஷ்ணா ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். சஞ்சய் கலை துறையை கவனிக்க, சுபராக் படத்தொகுப்பு செய்கிறார்.

படம் குறித்து கூறிய இயக்குநர் கிருஷ்ணா, “;ஜில்லுன்னு ஒரு காதல்’ காதல் கதையாக உருவாக்கினேன். ’நெடுஞ்சாலை’ ஆக்ஷன் படமாக உருவாக்கினேன். ‘மானே தேனே பேயே’ படம் வேறு மாதிரியான கதைக் களத்தை மையப் படுத்தி உருவாகுகிறோம்.

ஆரி – சாண்டி என்றழைக்கப்படுகின்ற சந்தானம் என்கிற பெயரில் சாப்ட்வேர் இளைஞராக நடிக்கிறார்.  டேனியல் பாலாஜி இதுவரை ஏற்றிராத வேடமேற்று நடிக்கிறார். இது தனது வாழ்க்கைக்கு கிடைத்த சவாலான வேடம் என்கிறார் டேனியல் பாலாஜி.

சமகாலத்து இளைஞர்களின் வாழ்ஹ்க்கையை பிரதிபலிக்கும் படமாக உருவாக்கி வரும் ‘மானே தேனே பேயே’ படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி ஒரே கட்டமாக படத்தை முடிக்க முடிவு செய்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.




















Comments