Lingaa Official Teaser | Rajinikanth !!! ரஜினியின் ‘லிங்கா’ பட டிரெய்லர் 24 மணி நேரத்தில் பத்து லட்சம் பேர் பார்த்தனர்!!!


3rd of November 2014
சென்னை:ரஜினியின் ‘லிங்கா’ பட டிரெய்லர் இரு தினங்களுக்கு முன் வெளியானது. உடனடியாக இதனை டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப்களில் ரசிகர்கள் பரப்பினர். 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் பத்து லட்சம் பேர் இதனை பார்த்தனர். மேலும் இது பரவி வருகிறது.

டிரெய்லரில் ரஜினி இளமையாகவும் ஸ்டைலாகவும் கலக்கியதாக ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். பட்டு வேட்டி, சட்டையில் மக்களை பார்த்து கும்பிடுவது போன்றும் அனுஷ்காவுடன் ஸ்டைலாக நடனம் ஆடுவது போன்றும் வில்லன்களுடன் ஆக்ரோஷமாக சண்டையிடுவது போன்றும் ஆற்று பாலத்தின் மேல் கம்பீரமாக நிற்பது போன்றும் தோன்றும் டிரெய்லரில் ரஜினி இருந்தார்.


ஒவ்வொரு காட்சியும் ரசிக்கதக்கவையாக இருந்தன என்று ரசிகர்கள் தெரிவித்தனர். ‘லிங்கா’ படத்தை டிசம்பர் 12–ந்தேதி ரஜினி பிறந்த நாளில் திரையிட திட்டமிட்டனர். ஆனால் டப்பிங் ரீ-ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் அதற்குள் முடியுமா? என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டு உள்ளது. பணிகள் முடியாவிட்டால் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்படலாம் என தெரிகிறது.

படத்தில் பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது. இதை படமாக்குவதற்காக ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் வெளிநாடு சென்றுள்ளனர். 'லிங்கா' படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தையும் இப்போதைய காலகட்டத்தையும் உள்ளடக்கிய கதையம்சத்தில் இப்படம் தயாராகியுள்ளது.

சுதந்திரத்துக்கு முந்தைய ரஜினி வேட்டி சட்டையிலும் இப்போதைய ரஜினி மாடர்ன் டிரெஸ்ஸிலும் வருகின்றனர். இதில் நாயகிகளாக சோனாக்சி சின்ஹா, அனுஷ்கா நடிக்கின்றனர். காமெடி வேடத்தில் சந்தானம் வருகிறார்.

பெரியாறு அணையைபோல் ஏரி தகராறை மையமாக வைத்து இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள இயக்குனரால் எடுக்கப்பட்டு சர்ச்சைகளை கிளப்பிய 'டேம் 999' படத்துக்கு பதிலடி கொடுப்பதுபோல் இந்த படத்தின் கதை இருக்கும் என்றும் பேச்சு நிலவுகிறது.

Comments