Kappal Audio Launch Stills!!! விஜய் மாதிரி ஜாலியான மனிதரை பார்க்க முடியாது: டைரக்டர் ஷங்கர்!!!

24th of November 2014
சென்னை:Tags : Kappal Audio Release Gallery, Kappal Songs Launch Event Stills, Kappal Movie Audio Release Photos, Kappal Audio CD Launch Pictures, Kappal Audio Release Function images.

தான் நடிக்கும் படங்களில் வில்லன்களை பறந்து பறந்து அடித்து பந்தாடும் விஜய், நிஜத்தில் ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவராக இருக்கிறார்.

சினிமா விழாக்களுககு வந்தாலும் சரி, தன்னிடம் கதை சொல்ல வருபவர்களாக இருந்தாலும் சரி, அவர்களிடம் பட்டும் படாமலும்தான் பேசுவார்.
 
அப்படி நண்பன் படத்தில் நடிப்பது சம்பந்தமாக விஜய்யை டைரக்டர் ஷங்கர் மீட் பண்ணியபோதும் அப்படித்தான் பழகினாராம் விஜய்.

அதனால், கேசுவலாக பேச மாட்டேங்கிறாரே. இவரை வைத்து எப்படி படம் பண்ணப்போகிறோம் என்று மனதளவில் நினைத்துக்கொண்டாராம்.
ஆனால், படப்பிடிப்புக்கு செல்வதற்கு ஒரு இரண்டு தினங்களுககு
முன்பு அவர்கள் இரண்டு பேருமே ஒரு விருந்து நிகழ்ச்சியில் எதேச்சையாக சந்தித்துக்கொண்டார்களாம்.

அப்போது, விஜய்யிடம் பேச்சுக்கொடுத்துப் பார்த்தாராம் ஷங்கர். ஆனால், அதுவரை விலகியே நின்ற விஜய், இவர் சுவராஸ்யமாக பேசத் தொடங்கியதும் அவருடன் பதிலுக்கு பதில் ஜாலியாக பேசி அரட்டையடிக்கத் தொடங்கி விட்டாராம்.

ஒரு கட்டத்தில் இரண்டு பேருமே காலேஜ் ப்ரண்டு மாதிரியாகி விட்டார்களாம். இப்படி சொல்லும் ஷங்கர், இப்போது என்னை அண்ணன் என் விஜய் அழைததாலும்கூட, எங்களுக்கிடையே ப்ரண்ட்லியான பழக்க வழககம்தான் உள்ளது.
 
அதனால் விஜய்யைப்பொறுத்தவரை அவரிடம் நன்றாக பழகாதவரைதான் கூச்ச சுபாவம் கொண்டவராக இருப்பார். பழகி விட்டால். அவரை மாதிரி ஜாலியான மனிதரை பார்க்க முடியாது என்கிறார் ஷங்கர்.
 

 

 


 

 

 


Tags : Kappal Audio Release Gallery, Kappal Songs Launch Event Stills, Kappal Movie Audio Release Photos, Kappal Audio CD Launch Pictures, Kappal Audio Release Function images

Comments