21st of November 2014
சென்னை:Tags : Jeyikkira Kudhira Movie Pooja Photos, Jeyikkira Kudhira New Tamil Movie Launch images, Jeyikkira Kudhira Film Poojai Event Stills, Jeyikkira Kudhira Movie Launch Function Gallery, Jeyikkira Kudhira Movie Shooting Start Pictures.
சூர்யா நடித்த ‘காக்க காக்க’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமாகி, அதன் பிறகு ‘நான் அவன் இல்லை’, ’தோட்டா’, ‘திருட்டு பயலே’, ‘மஞ்சக்காரன்’ ஆகியப் படங்களின் மூலம் ஹீரோவாக வலம் வந்த ஜீவன், சிறு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
ஷக்தி சிதம்பரம் இயக்கும் ‘ஜெயிக்கிற குதிர’ படத்தில் ஜீவன் ஹீரோவாக நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக டிம்பிள் சோப்டே, அம்பிகா சோனி, திராவியா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள்.
பிங்கி புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் பியாரிலல் கே.குந்தேச்சா தயாரிக்கும் இப்படத்தில் ஜெயபிரகாஷ், கருணாகரன், தம்பிராமையா, ஜி.ஆர், கோவைசரளா, சிங்கம்புலி, மனோபாலா, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, மதுமிதா, சித்ராலட்சுமணன் இவர்களுடன் பவர்ஸ்டார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
லொள்ளு, நக்கல், நையாண்டி காமெடிகளுக்கு பேர்பெற்றரான ஷக்தி சிதம்பரம், சதயராஜுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். அத்துடன் பிரபு, பிரபுதேவா, பார்த்திபன், சுந்தர்.சி, சிபிராஜ், லாரன்ஸ், கருணாஸ் என முன்னணி நடிகர்களை வைத்து, பல வெற்றிப் படங்களை இயக்கி வெற்றிக்கண்டுள்ள இவரது படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆஞ்சநேயலு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வைரமுத்து, மதன் கார்கி ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். ரஞ்சித் படத்தொகுப்பை கவனிக்க ஆர்.கே.விஜய்முருகன் கலையை நிர்மாணிக்கிறார். தினேஷ் நடனம் அமைக்க, தளபதி தினேஷ் சண்டைப்பயிற்சியை மேற்கொள்கிறார்.
எஸ்.எம்.சேகர் தயாரிப்பை மேற்பார்வையிட, அண்ணாதுரை, கண்ணதாசன், காமராஜ் ஆகியோர் இணை இயக்குநர்களாக பணிபுரிய, மக்கள் தொடர்பை மெளனம் ரவி கவனிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா இன்று பூஜையுடன், சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டார்கள்.
படம் குறித்து கூறிய இயக்குநர் ஷக்தி சிதம்பரம், “முடியாது என்பது முட்டாள் தனம். முடியும் என்பது மூலதனம் என்கிற ஆறு வார்த்தைகள் தான் கதைக் களம்!, இதை வைத்து காமெடி, காதல், கலாட்டா படமாக உருவாகிறது. இன்று (நவ.21) படப்பிடிப்புடன் துவக்க விழா நடைபெற்று தொடர்ந்து 60 நாட்களில் படப்பிடிப்பு முடிவடைகிறது. சென்னை, பாண்டி, மும்பை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளோம்.” என்றார்.

Tags : Jeyikkira Kudhira Movie Pooja Photos, Jeyikkira Kudhira New Tamil Movie Launch images, Jeyikkira Kudhira Film Poojai Event Stills, Jeyikkira Kudhira Movie Launch Function Gallery, Jeyikkira Kudhira Movie Shooting Start Pictures
Comments
Post a Comment