Director Karthik Subburaj's Stone Bench Creations Launch Photos!!! குறும்படத்திற்கு இனி பணம் கிடைக்கும் – கார்த்திக் சுப்புராஜின் புது ஐடியா!!!
10th of November 2014
சென்னை:Tags : Stars at Karthik Subburaj's Stone Bench Creations Opening Gallery, Karthik Subburaj's Stone Bench Creations Launch Event Stills, Karthik Subburaj's Stone Bench Creations New Production Opening Function Photos, Karthik Subburaj's Stone Bench Creations Launch Pictures, Celebrities at Karthik Subburaj's Stone Bench Creations Opening images.
சென்னை:Tags : Stars at Karthik Subburaj's Stone Bench Creations Opening Gallery, Karthik Subburaj's Stone Bench Creations Launch Event Stills, Karthik Subburaj's Stone Bench Creations New Production Opening Function Photos, Karthik Subburaj's Stone Bench Creations Launch Pictures, Celebrities at Karthik Subburaj's Stone Bench Creations Opening images.
குறும்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் முக்கிய இடம்பிடித்த கார்த்திக் சுப்புராஜ் தனது தாய்வீடான குறும்படங்களை மறக்கவும் இல்லை.. அதன் அடுத்தகட்ட வளர்ச்சி பற்றி நினைக்காமலும் இல்லை. அதனால் தான் குறும்பட இயக்குனர்களுக்கான எதிர்கால தளத்தை விரிவுபடுத்தும் முயற்சியாக ‘பெஞ்ச் ஸ்டோன்’ (bench stone) என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளார்.
இதன்மூலம் சிறந்த குறும்படங்களை தேர்ந்தெடுத்து அவற்றில் ஆறேழு குறும்படங்களை ஒன்றிணைத்து சுமார் 1௦௦ நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமாக வெளியிட வகை செய்துள்ளார். இனிவரும் காலங்களில் இந்த குறும்பட திரைப்படங்கள் சென்னையில் உள்ள சத்யம் மற்றும் பி.வி.ஆர் தியேட்டர்களில் திரையிடப்படும்.
அதுமட்டுமல்ல.. இப்படி பெரிய திரைகளில் திரையிடப்படாத குறும்படங்களை benchflicks.com என்கிற யூடியூப் தளத்தில் இன்றிலிருந்தே பார்க்கமுடியும். மேலும் இதனை பார்த்துவிட்டு வெறுமனே லைக் மட்டும் பண்ணிவிட்டு செல்லாமல் அந்த குறும்பட இயக்குனருக்கோ, தயாரிப்பாளருக்கோ தாங்கள் நன்கொடை எதுவும் அளிக்க விரும்பினால் அதை செலுத்தும் வழிவகையும் செய்யப்பட்டுள்ளதாம். இதனால் இனி குறும்பட இயக்குனர்கள் காட்டில் பண மழைதான் போங்கள்..
இன்னொரு உபரி தகவல்.. சினிமாவில் நடிக்க விரும்பி வாய்ப்பு தேடி அலைபவர்களுக்கு வரப்பிரசாதமாக பெஞ்ச் கேஸ்ட் (bench cast) என்ற தளத்தையும் உருவாக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். நடிக்கும் ஆர்வம் இருந்தும் இலக்கின்றி வாய்ப்பு தேடுபவர்கள் இந்த அமைப்பில் தங்களது சுய விபரங்களையும் திறமைகளையும் பதிந்துவிட்டால் அவர்களது திறமைக்கேற்றபடி வாய்ப்பு தரும் நிறுவனங்களுக்கோ, இயக்குனர்களுக்கோ இந்த பெஞ்ச் கேஸ்ட் (bench cast) மூலமாக இவர்களது பெயர்கள் பரிந்துரை செய்யப்படும்.
Comments
Post a Comment