ரஜினிகாந்தால் சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு!!!


7th of November 2014
சென்னை:துபாயில் இருந்து நேற்று சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்தினால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘லிங்கா’ படம் அவருடைய பிறந்தநாளா டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வேலைகளில் உள்ள படக்குழுவினர், சமீபத்தில் லிங்கா படத்தின் டிரைலரை வெளியிட்டனர். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த டிரைலரை துபாயிலும் வெளியிட முடிவு செய்து, அதற்காக படக்குழுவினர் துபாய் சென்று அங்கே டிரைலரை வெளியிட்டனர்.


அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ரஜினிகாந்த், இன்று காலை துபாயில் இருந்து சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் காலை வந்த ரஜினிகாந்தை பார்த்த பயணிகள், “ரஜினி...ரஜினி...” என்று கூச்சலிட்டனர். அவர்களைப் பார்த்து ரஜினியும் கைகளை அசைத்தார். உடனே உற்சாகமடைந்த ரசிகர்கள் ரஜினியைப் பார்த்து ஆரவாரம் செய்தார்கள். அதேபோல ரஜினிகாந்த வருவதை அறிந்துக்கொண்ட ரசிகர்கள்

 
 விமான நிலையத்தின் வெளியே குவிந்திருந்தனர். ரஜினி வெளியே வந்தவுடன் அவரை ரசிகர்கள் சூழ்ந்துக்கொண்டு அவரிடம் கை குலுக்கு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய ரஜினிகாந்தை காவலர்கள் மீடு காரில் ஏற்று அனுப்பி வைத்தனர்.

ரஜினியின் வருகையால் சிறிது நேரம் பன்னாட்டு விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

Comments