அஜித் படத்துடன் ‘வாலு’ படத்தை சிம்பு மோதவிடுவாரா!!!

20th of November 2014
சென்னை:சிம்பு படத்தைப் பார்க்கும் பாக்கியம் இந்த வருடமும் வாய்க்காது போலிருக்கிறது. 2012ஆம் ஆண்டு வெளிவந்த ‘போடா போடி’ படத்திற்குப் பிறகு சிம்பு ஹீரோவாக நடித்த எந்தப் படமும் இதுவரை வெளியாகவில்லை. இடையில் கௌரவ வேடத்தில் மட்டும் தலை காட்டினார்.

இப்போது ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’, கௌதம் மேனன் இயக்கும் படம் என 3 படங்களில் நடிக்கிறார். இதில் ‘வாலு’ படம் கடந்த 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, 2012ல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், அந்தப் பொங்கலும் போய், இந்த வருடப் பொங்கலும் போய், தற்போது 2015 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.

‘வாலு’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து அதன் டப்பிங் பணிகளில் தற்போது பிஸியாக இருக்கிறார் சிம்பு. படத்தின் பாடல்களும் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதோடு, ‘வாலு’ படம் வெளியாவதிலிருந்த சில நிதிப் பிரச்சனைகளும் தற்போது தீர்க்கப்பட்டுவிட்டதாம். இதனால் கண்டிப்பாக படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வார்கள் எனத் தெரிகிறது.

ஆனால், பொங்கலை முன்னிட்டு அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படமும் வெளியாகவிருப்பதால், தான் பெரிதும் மதிக்கும் அஜித் படத்துடன் ‘வாலு’ படத்தை சிம்பு மோதவிடுவாரா என்பது சந்தேகமே.

Comments