6th of November 2014
சென்னை:அஜித், அனுஷ்கா, த்ரிஷா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை கெளதம் மேனன் இயக்கி வருகிறார். பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடைபெற்று வந்த படத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ‘என்னை அறிந்தால்’ என்று தலைப்பிட்டார்கள்.
தலைப்பு வெளியானதால், டீஸர், பாடல், படம் எப்போது என அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி நிலவியது.
இந்நிலையில் இம்மாத இறுதியில் டீஸரை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. டிசம்பர் மாதம் இசை வெளியீடு நடைபெற இருக்கிறது. பொங்கல் அன்று படத்தை வெளியிட தீர்மானித்திருக்கிறது படக்குழு.
பொங்கல் 2014 அன்று ‘வீரம்’ வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தது போலவே, இந்தப் பொங்கலுக்கு ‘என்னை அறிந்தால்’ அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
Comments
Post a Comment