26th of November 2014
சென்னை:சந்தோஷ்
சுப்பிரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்பட பல தமிழ், தெலுங்கு,
இந்தி படங்களில் நடித்த நடிகை ஜெனிலியாவுக்கு நேற்று குழந்தை பிறந்துள்ளது. ஆண்
குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் நடிகை ஜெனிலியாவுக்கு வாழ்த்துக்கள்
குவிந்து வருகின்றது.
கடந்த 2003ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான நடிகை ஜெனிலியா, பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமான அவருக்கு இன்று மும்பையில் அழகான ஆண்
குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
இதுகுறித்து
ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் தனது மகிழ்ச்சியை நேற்று சமூக வலைத்தளத்தில்
தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment