20th of November 2014
சென்னை:இந்த வருட தமிழ்சினிமாவை பொறுத்தவரை அதிகமான புகழ் வெளிச்சம் பாய்ந்துள்ளது ‘ஜிகர்தண்டா’ மூலம் ‘அசால்ட் சேது’வாக மிரட்டிய பாபி சிம்ஹா மீதுதான். ஏதாவது விழாக்களுக்கு அவர் வந்தால் கூட மற்ற அனைவரையும் விட அவருக்கு ரசிகர்களிடம் வரவேற்பும் கைதட்டலும் அள்ளுகின்றன.
காமெடி நடிப்பில் முக பாவனைகள் மூலம் அப்ளாஸ் அள்ளும் சிம்ஹாவும் டயலாக் டெலிவரியால் கலாய்த்து எடுக்கும் மிர்ச்சி சிவாவும் ஒரு படத்தில் கூட்டணி சேர்ந்தால் எப்படி இருக்கும்..? ஒரே ரணகளம் தானே..?
ஒ
ளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியுள்ள லக்ஷ்மண் குமார் என்பவர் இந்த கூட்டணியை உருவாக்கி முதல் ஷெட்யூலையும் சைலன்ட்டாக முடித்துவிட்டாராம். கதாநாயகியாக லக்ஷ்மிதேவி என்பவர் நடிக்கிறார்.
Comments
Post a Comment