அட்டி' மூலம் ஹீரோவாகும் மா.கா.பா.ஆனந்த்!!!

10th of November 2014
சென்னை:வானவராயன் வல்லவராயன்' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமான விஜய் டிவி, மா.கா.பா.ஆனந்த், தற்போது 'அட்டி' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார்.

'அரிது அரிது', 'ஈசா' ஆகியப் படங்களை தயாரித்துள்ள இ5 எண்டெர்டயின்மெண்ட் நிறுவனத்தின் ஜெ.ஜெயகிருஷ்ணன், இமேஜினரி மிஷன்ஸ் நிறுவனத்தின் கார்த்திகேயனுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.


இப்படத்தை விஜயபாஸ்கர் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் இயக்குனர் சுராஜியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

மா.கா.பா.ஆனந்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஷ்மிதா நடிக்கிறார்.

வெங்கடேஷ் அர்ஜுன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சுந்தர் சி.பாபு இசையமைக்கிறார்.  சினேகன், அண்ணாமலை, விஜயசாகர், கவிவர்மன், கானா வினோத் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.  ராஜேஷ் எடிட்டிங் செய்ய, பவர் பாண்டியன் சண்டையிப் பயிற்சியை மேற்கொள்கிறார்.

படத்தைப் பற்றி கூறிய இயக்குனர் விஜயபாஸ்கர், "சென்னை ஐஷ்ஹவுஷ்  பகுதியில் வாட்டர் சப்ளை கடை வைத்திருக்கும் கதாநாயகன் மற்றும் நண்பர்கள் பற்றிய கதை தான் இப்படம். சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு எதிர்பாராமல் ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்னையை சாதூர்யமாக எப்படி கதாநாயகன் சமாளித்தார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சித்தரிக்கும் பொழுதுபோக்கு படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறோம்." என்றார்.










Comments