6th of November 2014
சென்னை:கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த்தை வைத்து ‘வை ராஜா வை’ படத்தை விறுவிறுப்பாக இயக்கி வரும் ஐஸ்வர்யா தனுஷ் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கிறார்.. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்தில் விவேக், இயக்குனர் வசந்த், காயத்ரி ரகுராம், டேனியல் பாலாஜி இவர்களுடன் டாப்ஸியும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
கிட்டத்தட்ட முக்கால்வாசி படப்பிடிப்பை முடித்துவிட்ட ஐஸ்வர்யா, இவ்வளவு நாட்களாக காத்திருந்தது ஒரு முன்னணி நடிகர் தனது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவேண்டும் என்பதற்காகத்தான். அதற்கேற்றமாதிரி அந்த நடிகரும் சம்மதித்துவிட்டார். அது வேறு யாருமல்ல அவரது கணவர் தனுஷ் தான். இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்துகொண்டதோடு தனுஷுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.
Comments
Post a Comment