பத்துவருடம் காத்திருந்தவருக்கு கிடைத்த ஜாக்பாட் தான் ரஜினி படம்!!!



6th of November 2014
சென்னை:பத்து வருடங்களுக்கு முன் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் சாபுசிரில் அவர்களிடம் உதவி கலை இயக்குனராக பணியாற்றியவர் அமரன். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போல இப்போது அவரது கடின உழைப்பிற்கு கிடைத்திருக்கிறது ஜாக்பாட்..
 
ஆம்.. பத்து வருடங்களுக்கு முன் உதவியாளாராக பணியாற்றிய அந்த அமரன் தான், தற்போது அதே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள, உலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ‘லிங்கா’ படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

“ஜித்தன்” படத்தின் மூலம் கலை இயக்குனராக புரமோஷன் வாங்கிய அமரனுக்கு. அந்தப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின், தனியாக வந்து இயக்கிய, ‘சித்திரம் பேசுதடி’ படத்திலும் வாய்ப்பு கிடைத்தது.
 
அதைத்தொடர்ந்து மிஷ்கினின் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் படங்களில் தொடர்ச்சியாக கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார் அமரன். கலை இயக்கம் பற்றிய அனைத்தையும் சாபுசிரிலிடமே பயின்றதாகவும் தன் சினிமா வாழ்வின் உயரங்களுக்கு சாபுசிரில் அவர்களே காரணம் என்றும் குருபக்தி’ மறவாமல் கூறுகிறார் அமரன்.

Comments